உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தந்தை மாயம்: மகன் புகார்

தந்தை மாயம்: மகன் புகார்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே தந்தையைக் காணவில்லை என மகன், போலீசில் புகார் அளித்துள்ளார்.அரகண்டநல்லுார் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுப்பிள்ளை, 80; கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு, முடியனுாரில் இருக்கும் தனது மகள் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது மகன் குப்பன், 55; கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்