மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
25-Sep-2025
கள்ளக்குறிச்சி : ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சத்தியராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுரேஷ் வரவேற்றார். வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பழனி சிறப்புரையாற்றினார். துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மகளிரணி செயலாளர் சத்தியா நன்றி கூறினார்.
25-Sep-2025