உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தென்பெண்ணையாறு கரையோர வெள்ள பாதிப்புகள் ஆய்வு

தென்பெண்ணையாறு கரையோர வெள்ள பாதிப்புகள் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர வெள்ள சேதங்களை துணை கலெக்டர் ஆய்வு செய்தார். தென்பெண்ணை ஆற் றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கிராமங்களான மூங்கில் துறைப்பட்டு, மேலந்தல், ஜம்பை மற்றும் காங்கியனுார் ஆகிய தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களை து ணை கலெக்டர் சுமதி, திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், தாசில்தார்கள் வெங்கடேசன், சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்பொழுது வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வி.ஏ.ஓ., சரவணன், ஊராட்சி தலைவர் பரமசிவம், பொறியாளர் ஹரி கிருஷ்ணன், பணி மேற்பார்வையாளர் நேரு, ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி