உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி: இந்திய ரயில்வே தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 6 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து கலெக்டர் பத்மஜா விடுத்துள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி தொழில்நுட்பம் சாராத பிரபலமான பிரிவுகளில் பிளஸ் 2 கல்வித் தகுதிக்கு 1,688, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 3,548, நிலைய அதிகாரிகளுக்கு(பட்டபடிப்பு முடித்தவர்கள்) 1,215 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 முடித்தவர்கள் வரும் நவ., 13 ம் தேதி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரும் நவ., 6 ம் தேதி, நிலை அதிகாரி பணிக்கு வரும் நவ., 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 18–33க்குள் இருக்க வேண்டும். எஸ்சி.எஸ்டி.,க்கு 5 ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டுகள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்விற்கு www.rrbapply.gov.inஇணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாடூர் டோல்கேட் அருகே உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 6ம் தேதி காலை 10 மணி துவங்குகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151 - 295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை