மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
22-May-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.அரகண்டநல்லுார் தேஜ்ராஜ் நினைவு அறக்கட்டளை, திருக்கோவிலுார் பாபுலால் ஜூவல்லர்ஸ், மகாவீர், ரமேஷ் ஜூவல்லர்ஸ், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் திருக்கோவிலுார், வடக்கு வீதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் 260 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 86 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தேஜ்ராஜ் நினைவு அறக்கட்டளை நிர்வாகி நிர்மல் குமார், மகாவீர் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் மகாவீர்சந்த், ஜெயின் சங்க செயலாளர் நித்தேஷ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
22-May-2025