உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

மூங்கில்துறைப்பட்டு; ரங்கப்பனுார் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் மற்றும் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ குழு சார்பில் மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சி சமுதாய கூடத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் தலைமை தாங்கினார். கண்ணில் புரை, சதை வளர்ச்சி, நீர் அழுத்தம், நீர் வடிதல், கண் எரிச்சல், கண் வலி, தலை வலி, துாரப்பார்வை, கிட்ட பார்வை குறித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் இதயத்துல்லா, பொருளாளர் பழனிவேல், வேலு, அண்ணாமலை, பாண்டியன், தண்டாயுதபாணி, பாலசுந்தரம், ஊராட்சி துணை தலைவர் ஊராட்சி செயலாளர் திருமாவளவன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை