மேலும் செய்திகள்
8 வட்ட வழங்கல் ஆபீசில் 193 மனுக்களுக்கு தீர்வு
26-Jan-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் நேர்முக உதவியாளர் அனந்தசயனன் வரவேற்றார். கூட்டத்தில் வழங்கல் அலுவலர்கள், நுகர்வோர் அமைப்பினர் அருண் கென்னடி, சுப்ரமணியன், மணி, ஆறுமுகம் உள்ளிட்ட எரிவாயு மற்றும் பெட்ரோல் பங்க் முகவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வாகன ஓட்டிகளை ெஹல்மெட் அணிந்து வர அனைத்து பெட்ரோல் பங்குகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. நுகர்வோர் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
26-Jan-2025