| ADDED : ஜன 22, 2024 12:43 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.குடிமைப்பொருள் தனி தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் இணைத்தல், புதிய அட்டை உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 34 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.இளநிலை வருவாய் ஆய்வாளர் தினேஷ், உதவி யாளர் பெரியதமிழன் உட் பட பலர் பங்கேற்றனர்.சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் கமலம் தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. பெறப்பட்ட 20 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.வட்ட பொறியாளர் நல்லுசாமி, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் பங்கேற்றனர். ரிஷிவந்தியம்
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் சுப்ர மணியன் முன்னிலை வகித்தனர். முகாமில், பெறப்பட்ட 17 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.