உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / த.வெ.க., நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் ஆறுதல்

த.வெ.க., நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் ஆறுதல்

கள்ளக்குறிச்சி,: ரிஷிவந்தியம் அருகே பேனர் தகராறில் காயமடைந்த த.வெ.க., நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுச்செல்லுாரை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் ஜெயமணி,31; த.வெ.க., நிர்வாகி. இவர் கட்சி தலைவர் விஜய் பிறந்தநாளுக்கு நிர்வாகிகளுடன் இணைந்து பேனர் வைத்த போது, தி.மு.க.,வினருடன் மோதல் ஏற்பட்டது. இதில், தி.மு.க.,வினர் தாக்கியதில், த.வெ.க., நிர்வாகிகள் ஜெயமணி,31; சரவணன்,39; செந்தில்முருகன்,37; ஆகியோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் நேரில் சென்றார். சிகிச்சையில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து த.வெ.க., தலைவர் விஜய், மொபைல் போனில் அவர்களிடம் தனித்தனியாக பேசி ஆறுதல் கூறினார். மேலும், தொடர்ந்து மக்கள் பணி செய்யவும், கட்சி உறுதுணையாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், இணை செயலாளர்கள் ராமு(மேற்கு), மோகன்(கிழக்கு) மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை