உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

புதிய வழித்தடங்களில் அரசு பஸ் சேவை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு 

ரிஷிவந்தியம் : வாணாபுரம் தாலுகா கிராமங்களை இணைத்து புதிய வழித்தடங்கள் வழியாக அரசு பஸ் சேவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பகண்டை கூட்ரோட்டில் நடந்த விழாவிற்கு, விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அர்ஜூனன் தலைமை தாங்கினார். துணை பொது மேலாளர் மணி, கிளை மேலாளர்கள் சிவசங்கரன், நாராயணமூர்த்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.விழாவில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று நான்கு வழித்தடங்களில் வழியாக பஸ் வசதியை துவக்கி பேசுகையில், 'பகண்டை கூட்ரோடு வழியாக வெளியூர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். தற்போது கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு பஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும், மணலுார்பேட்டையில் புதிதாக தடுப்பணை கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. ரிஷிவந்தியம் தொகுதிக்கு தேர்தலின் போது அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் இந்த தடுப்பணை கட்டுவதன் மூலம் 100 சதவீதம் பணிகள் நிறைவேற்றி விட்டோம்' என்றார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், நகர செயலாளர் ஜெய் கணேஷ், நிர்வாகி ராஜு உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை