உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அரசு கல்லுாரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

 அரசு கல்லுாரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு கல்லுாரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தென்சிறுள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சகி, 19; இவர், கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரியில் நேற்று முன்தினம் அரியர் தேர்வு நடந்துள்ளது. அதில் சகி மொபைல் போனை தேர்வு அறைக்கு எடுத்து சென்று மொபைல் போனை பார்த்து தேர்வு எழுதியுள்ளார். இதனால் சகியின் தந்தையை கல்லுாரிக்கு வரவழைத்துள்ளனர். அவர் தனது மகனை கண்டித்து விட்டு, பேராசிரியர்களிடம் மன்னிப்பு கேட்டுச் சென்றார். இதனால், மனமுடைந்த சகி விஷம் குடித்து மாலை 6:30 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அருகே ரங்கநாதபுரம் சாலையில் மயங்கி கிடந்துள்ளார். தகவலறிந்த சென்ற அவரது தந்தை சங்கர், சகியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு நேற்று அதிகாலை 5:30 மணிக்கு சகி இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை