மேலும் செய்திகள்
முதியவர் மாயம்
28-Mar-2025
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசு பள்ளி மாணவர் விடுதி கட்டடம் திறப்பு விழாந டந்தது.சங்கராபுரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிதாக அரசு பள்ளி மாணவர் விடுதி கட்டப்பட்டது. நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் விடுதியை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சங்கராபுரத்தில் புதிய கட்டடத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.ஒன்றிய சேர்மன் திலகவதி ராகராஜன், பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி, துணை சேர்மன் ஆஷாபீ, நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தாட்கோ செயற்பொறியாளர் அன்பு சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Mar-2025