உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பேத்தி மாயம் பாட்டி புகார்

பேத்தி மாயம் பாட்டி புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பேத்தியைக் காணவில்லை என பாட்டி, போலீசில் புகார் அளித்துள்ளார்.கோயம்புத்துார் லாலாலைன் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு மனைவி ஜோதி, 25; இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த அக்டோபர் 30ம் தேதி ஜோதியும், அவரது பாட்டி முத்துலட்சுமியும் உறவினரை பார்க்க கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தனர்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ஜோதி நீண்ட நேரமாகியும் வரவில்லை.இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !