உள்ளூர் செய்திகள்

மயானக் கொள்ளை

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.விழா, கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மதியம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் வீதியுலா நடந்தது. பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து சென்றனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்று மயானம் சென்றடைந்து, அங்கு பக்தர்கள் காய்கறிகள், பழங்கள், மற்றும் உணவு தானியங்களை இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி