மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 236 மனுக்கள் குவிந்தது
17-Sep-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 485 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வருவாய் துறை, நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, வேளாண், காவல், ஊரக வளர்ச்சித் துறை என பல்வேறு துறை சார்ந்த 485 மனுக்கள் பெறப்பட்டது.தொடர்ந்து மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு கூட்டுறவு கலைஞர்கள் நலவாரியம் சார்பில் 2 பேருக்கு திருமண நிதி உதவித் தொகை தலா 5,000 ரூபாய், ஒருவருக்கு 1,750 கல்வி உதவித் தொகை என உதவித் தொகையை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,சத்தியநாராயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
17-Sep-2024