மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
05-Sep-2025
கள்ளக்குறிச்சி: இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் இருதய நோய் தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. எலியத்துார் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் அசோக் முன்னிலை வகித்தார். உதவி வேதியியல் துறை பேராசிரியர் ராமர் வரவேற்றார். வேதியியல் துறை பொறுப்பாசிரியர் சங்கீதா, கடத்துார் வி.ஏ.ஓ., விஜயபாரதி வாழ்த்தி பேசினார். இருதயத்தை காக்க வேண்டும். இருதயத்தை காக்க சத்தான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி தலைவர் லோகநாதன், உதவி பேராசிரியர்கள் அங்கமுத்து, மாரியாப்பிள்ளை, சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Sep-2025