கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக 15 வீடுகள் சேதமடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்: கள்ளக்குறிச்சி 4, தியாகதுருகம் 25, விருகாவூர் 14, கச்சிராயபாளையம் 3, கோமுகி அணை 10, மூரார்பாளையம் 16, வடசிறுவள்ளூர் 17, கடுவனுார் 16, மூங்கில்துறைப்பட்டு 10, அரியலுார் 12, சூளாங்குறிச்சி 15, ரிஷிவந்தியம் 12, கீழ்பாடி 6, கலையநல்லுார் 15, மணலுார்பேட்டை 4, மணிமுக்தா அணை 11, வாணாபுரம் 12, மாடாம்பூண்டி 9, திருக்கோவிலுார் வடக்கு 4, திருப்பாலப்பந்தல் 11, வேங்கூர் 17, பிள்ளையார்குப்பம் 5, எறையூர் 15, உ.கீரனுார் 6 என மாவட்டம் முழுவதும் 269 மி.மீ., அளவு மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 11.21 மி.மீ., மழை பதிவானது. 15 வீடுகள் சேதம் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக கள்ளக்குறிச்சி தாலுகா, உதயமாம்பட்டை சேர்ந்த முருகன் என்பவரது ஷீட் வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது. அதேபோல், வேளாக்குறிச்சி ஆறுமுகம் மனைவி கண்ணியம்மாள், வடதொரசலுார் மணவாளன் மனைவி மாணிக்கம்மாள், வினைதீர்த்தாபுரம் இருசன் மனைவி அஞ்சலை உட்பட கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை மற்றும் சின்னசேலம் தாலுகாவைச் சேர்ந்த 15 பேரின் ஓடு, கூரை மற்றும் ஷீட் வீடுகளின் ஒரு பகுதி இடிந்து சேதமானது.