உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

 வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40;இவர் சென்னையில் தங்கி கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்லும் இவர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்து வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து 2 சவரன் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ