வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாஸ்மாக் கொண்டு வந்த நாயகன் வாழ்க
மேலும் செய்திகள்
செய்தி கதம்பம்
22-Jan-2025
உளுந்தூர்பேட்டை: குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்,35; இவரது மனைவி கற்பகவள்ளி,32; இவர்களுக்கு திருமணமாக 10 ஆண்டாகிறது. மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற கோவிந்தன் நேற்று விடியற்காலை 4:30 மணிக்கு குடி போதையில் வீட்டிற்கு வந்தார். அதனை கற்பகவள்ளி கண்டிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த கோவிந்தன், கற்பகவள்ளி கழுத்தில் கத்தியால் வெட்டினார். அதில் படுகாயமடைந்த கற்பகவள்ளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து உளுந்துார்பேட்டைபோலீசார் வழக்க பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.
டாஸ்மாக் கொண்டு வந்த நாயகன் வாழ்க
22-Jan-2025