மேலும் செய்திகள்
கணவரிடம் தகராறு; மனைவி தற்கொலை
08-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் சத்தியராஜ், 24; மதுபழக்கம் காரணமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு நடந்து வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பவானி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். தன்னுடன் வீட்டிற்கு வருமாறு சத்தியராஜ் அழைத்ததற்கு பவானி மறுத்தார். இதனால் மனமுடைந்த சத்தியராஜ் கடந்த 12ம் தேதி களைக்கொல்லி மருந்து குடித்தார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் சத்தியராஜை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் காண்பித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
08-Oct-2025