மேலும் செய்திகள்
2 பெண்கள் மாயம் போலீஸ் விசாரணை
12-Nov-2024
கள்ளக்குறிச்சி: காணாமல் போன மனைவி, மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சரத்குமார்,26; தனியார் பஸ் கண்டெக்டர். கடந்த 29ம் தேதி பணி முடிந்து, இரவு 7 மணிக்கு வீட்டிற்கு சென்றார்.வீட்டில் மனைவி காவியா,25; மகள்கள் ரேஷ்கா,8; ஜெசிகா,6; ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து சரத்குமார் அளித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து காவியா மற்றும் அவரது மகள்களை தேடி வருகின்றனர்.
12-Nov-2024