உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 1,63,013 விவசாயிகளுக்கும் அடையாள எண்கள்

1,63,013 விவசாயிகளுக்கும் அடையாள எண்கள்

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் 1,63,013 விவசாயிகளுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தா். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தில் மின்னணு முறையில் தரவுகள், 562 வருவாய் கிராமங்களிலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மொத்தம் உள்ள 1,63,013 விவசாயிகளில் இதுவரை 86,560 விவசாயிகளுக்கு அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீதமுள்ள 76,453 விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை