உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகள் முகாமில் 97 பேருக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் முகாமில் 97 பேருக்கு அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 97 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணி, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் உஷாநந்தினி, கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத் திறனாளிகளை பரிசோதித்தனர்.முகாமில் பங்கேற்ற 126 பேரில் 97 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ