உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீஸ் ஸ்டேஷன் எதிரே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

போலீஸ் ஸ்டேஷன் எதிரே தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

உளுந்துார்பேட்டை : புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உளுந்துார்பேட்டை காவல் நிலையம் முன், ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 37 வயது நபருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக் கேட்ட பெண்ணின் கணவருக்கு, வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து கடந்த 23ம் தேதி உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் நேற்று விசாரணைக்கு வருமாறு கூறியிருந்தனர். மதியம் 12:00 மணியளவில் உளுந்துார்பேட்டை காவல் நிலையம் வந்த பெண்ணின் கணவர், புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையம் முன், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காவல் நிலையம் முன் கொத்தனார் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை