உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் காய்கறி விலை உயர்வு

சங்கராபுரம் பகுதியில் காய்கறி விலை உயர்வு

சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திற்கு பெங்களூருவிலிருந்து தினசரி லாரிகள் முலம் பெரும்பாலான தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.பெங்களூருவிலும் கடந்த 15 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்ததால் பெங்களூரு மார்க்கெட்டிலேயே வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.இதனால், சங்கராபுரம் பகுதியில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது 60 ருபாய்க்கு விற்கப்படுகிறது.இதே போன்று, அனைத்து காய்கறிகளும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கிலோவிற்கு 20 முதல் 30 ருபாய் வரை உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி