உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட வேளாண் பணிகள் மண்டல அலுவலர் ஆய்வு

மாவட்ட வேளாண் பணிகள் மண்டல அலுவலர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் பணிகளை மண்டல அலுவலர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் பணிகளை சென்னை திட்ட வேளாண் துணை இயக்குநரான, மண்டல அலுவலர் கோப்பெருந்தேவி ஆய்வு செய்தார். புதிதாக கட்டப்படும் விதை சுத்திகரிப்பு நிலைய விதை சேமிப்பு கிடங்கு, வடக்கனந்தல் அரசு விதைப்பண்ணை, சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் வேர்க்கடலை, உளுந்து விதைப் பண்ணைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, விவசாயிகள் அதிக மகசூல் பெற்றிட ஆலோசனை வழங்கினார்.தொடர்ந்து கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த அனைத்து வட்டார அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், வேளாண் திட்டங்களை களப்பணியாளர்கள் முறையாக ஆய்வு செய்து, திட்டப்பணிகளை விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் பணி செய்ய அறிவுறுத்தினார்.ஆய்வின்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், துணை இயக்குனர் பெரியசாமி, கலெக்டரின் உதவியாளர் விஜயராகவன், வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் உள்ளிட்ட வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ