உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தோட்டக்கலை பயிர்களில் உயிர் உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்

தோட்டக்கலை பயிர்களில் உயிர் உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்கறி மற்றும் பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் உயிர் உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சிவக்குமார் செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 36,960 எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் 7,200 ஹெக்டேரில் காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. கத்திரி, வெண்டை, மிளகாய், கீரை மற்றும் தக்காளி பயிர்களில் அதிகளவு சாறு உறிஞ்சும் பூச்சிகள், புழுக்களால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி, உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் விவசாயிகள் பயன்படுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் அறுவடை செய்ய வேண்டும். இதனால் பூச்சிக்கொல்லிகள், உரங்களின் எச்சம் நாம் உட்கொள்ளும் தானியங்களில் இல்லாமல் செய்யலாம். இல்லாவிடில் கேன்சர், ஒவ்வாமை போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பயனுள்ள உயிரினங்கள் அழிவதும், மண் வளமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்க, விவசாயிகள், இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். நுண்ணீர் பாசன உரங்களை பயன்படுத்தினால் 40 சதவீதம் வரை உரப்பயன்பாட்டு திறன் அதிகரித்து மகசூல் இரட்டிப்பாகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிர்களுக்கென 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே விவசாயிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பரிந்துரைக்கப்பட்ட அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தவும், உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்தி மக்களுக்கும், மண் வளத்திற்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை