உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கை: சிறப்பாக பணியாற்ற அறிவுறுத்தல்

 குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கை: சிறப்பாக பணியாற்ற அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் போக்சோ சட்டம், சிறார் நீதி சட்டம், குடும்ப வன்முறை சட்டம் மற்றும் மாவட்ட அளவிலான நாஷா முக்த் பாரத் அபியான் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து போக்சோ சட்ட நடவடிக்கைகள், குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பள்ளியில் சேர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அலுவல்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ