உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரும்பு பைப் திருட்டு

இரும்பு பைப் திருட்டு

கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் இரும்பு பைப் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 55; இவர், தனது நிலத்தில் இரும்பு ஷீட்டுகளால் கொட்டகை அமைத்திருந்தார். கடந்த மே மாதம் 18ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுரேஷ் என்பவர், இரும்பு ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இருந்த கொட்டகையை பிரித்து, அதில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பைப்புகளை திருடி சென்றுள்ளார். இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து சுரேஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை