ஜனனி ேஹாம்ஸ் வீட்டு மனை பிரிவுகள் விற்பனை துவக்கம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனனி ேஹாம்ஸ் வீட்டு மனைப்பிரிவுகள் விற்பனை துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணை நிறுவனர் ஜனனி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., குத்து விளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, உரிமையாளர் செந்தில்குமார் கூறுகையில், 'சென்னையின் மிகவும் பிரபல கட்டுமான நிறுவனமான ஜே.எஸ்., நிறுவனம், ஜனனி ேஹாம்ஸ் சார்பில், நகர ஊரமைப்பு இயக்கம் (டி.டி.சி.பி.,) மற்றும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி பெற்று, பிரம்மாண்டமான முறையில் மனைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.மனைப்பகுதியில் 33 மற்றும் 24 அடி அகலம் கொண்ட சிமென்ட் சாலை, தெரு மின்விளக்கு, தனி, தனியாக குடிநீர் பைப் வசதிகள் பொறுத்தப்பட்டுள்ளது. மனைப்பிரிவுக்கு அருகிலேயே கலெக்டர் அலுவலகம் அமைய உள்ளது.தொடக்க விழா சலுகையாக இன்று 7ம் தேதி வரை மனை வாங்கும் அனைவருக்கும் தங்க காசு இலவசமாக வழங்கப்படும். வங்கி கடன் வதியும் செய்து தருகிறோம்' என்றார்.நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.