மேலும் செய்திகள்
வீடு புகுந்து 7 சவரன் திருட்டு
21-Jan-2025
உளுந்துார்பேட்டை : வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் அருகில் உள்ள எஸ்.எஸ்.ஐ., வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கிழக்கு கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் பர்ஷித், 47; மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் திருமணத்திற்காக வெளியூர் சென்றிருந்தார்.நேற்று காலை பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில இருந்த 2 கிராம் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.மேலும், அதே தெருவில் உள்ள எலவனாசூர்கோட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கும் திருடு போனது.இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21-Jan-2025