மக்கள் மனம் கவர்ந்த பேராதரவுடன் கிருஷ்ணா பேப்பர் ஸ்டோர்ஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்
வீட்டு மனை மற்றும் நிலம் விற்பனை வணிகத்தில் சக்தி ரியல் ஏஜன்சிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது என கிருஷ்ணா பேப்பர் ஸ்டோர்ஸ் நிறுவன நிர்வாகி ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கிருஷ்ணா பேப்பர் ஸ்டோர்ஸ் பெயரில் கடையை தொடங்கி, பள்ளி மாணவர்களுக்கான புத்தக விற்பனையுடன், மக்களின் பேராதரவால் சக்தி ரியல் ஏஜன்சி, நாசா பட்டாசு கடை, பா.ஜ., விழுப்புரம் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பொறுப்புகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிரோம். எங்கள் நிறுவனத்தின் அடுத்த கட்ட இலக்காக மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற குறிக்கோளுடன் பா.ஜ., வழியாக மக்கள் பணியாற்றும் வாய்ப்பை செவ்வனே செய்து வருகிறேன். இத்துடன் வழக்கறிஞர் பணி மூலம், தமிழ்நாடு, புதுச்சேரி பார் அசோசியேஷன் துணை செயலாளர் என்ற பொறுப்புடன் அடித்தட்டு தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் கபிலர், அம்பேத்கர் மற்றும் பாரதியார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் என பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகித்து தொழிலாளர்களின் வாழ்வு மேம்படும் வகையில் நற்பணிகள் செய்து வருகிறோம். எங்கள் தொழில் நிறுவனம் நேர்மை, நாணயம், கைராசி என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், வீட்டு மனை மற்றும் நிலம் விற்பனை வணிகத்தில் சக்தி ரியல் ஏஜன்சிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது. வடக்கு வீதி மற்றும் ஆஸ்பிடல் ரோட்டில் நாசா ஏஜன்சி சார்பில் அதிக லாபமற்ற நோக்கில், பட்டாசு விற்பனை செய்கிறோம். எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் நேர்மையான உழைப்பும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுமே காரணம். அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.