அரசு பெண்கள் பள்ளியில் குறளும்,பொருளும் நிகழ்ச்சி
சங்கராபுரம்; சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் குறளும், பொருளும் நிகழ்ச்சி நடந்தது.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரொகையாபீ தலைமை தாங்கினார். முத்தமிழ் சங்க மாவட்ட தலைவர் முருககுமார் வரவேற்றார். சிறப்பு தலைவர் சண்முகசுந்தரம் குறளும்-பொருளும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அதிக அளவில் திருக்குறளை ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியர்கள் பொன்னுசாமி, இன்பநிலா, நர்மதாதேவி, மதியரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.