கள்ளக்குறிச்சியில் காணாமல் போகும் ஏரிகள்: ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரையொட்டி உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரையொட்டி கோட்டைமேடு பெரியேரி, பசுங்காயமங்கலம் ஏரி, ஏமப்பேர் ஏரி, சித்தேரி ஆகிய 4 ஏரிகள் உள்ளன. பருவ மழையில் கோமுகி அணை நிரம்பி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றும் போது தடுப்பணைகள் மூலம் ஏரிகளில் நீர் வரத்து ஏற்படும். இதில், 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுங்காயமங்கலம் ஏரிக்கு மட்டிகைக்குறிச்சி அருகே உள்ள மதகு மூலம் நீர் வரத்து ஏற்பட்டு வந்தது. ஏரி நீரை பயன்படுத்தி மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆக்கிரமிப்புஇந்நிலையில் நீர் வரத்து கால்வாய் முறையான பராமரிப்பு மற்றும் சீரமைப்பின்மையால் கருவேலம், வேம்பு உள்ளிட்ட மரங்களுடன், செடிகொடிகள் வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் நீர் வரத்து கால்வாயை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால், 25 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர், ராஜாஜி, நகர், எம்.ஜி.ஆர்., நகர், அம்மன் நகர் ஆகிய பகுதிகள் பசுங்காயமங்கலம் ஏரியையொட்டி அமைந்துள்ளது. ஏரியில் முழுமையாக தண்ணீர் நிரம்பினால் கோடை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க முடியும். அதிகாரிகள் அலட்சியம்தற்போது ஏரியில் நீர் வரத்து இன்றி அப்பகுதியில் பெய்யும் மழை நீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. நீர் வரத்து கால்வாய் சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர்.அதேபோல் பெரியேரி, சித்தேரி, தென்கீரனுார் ஏரிகளிலும் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளால் பருவ மழை காலங்களில் ஏரிகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் விரைவாக வற்றி போகும் சூழல் ஏற்படுகிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வுஇது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி நகரையொட்டியுள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தண்ணீர் தேக்கத்திற்கு வழிவகை செய்தால், கோடை காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணமுடியும். எனவே, ஏரியின் நீர் வரத்து கால்வாய் மற்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர். கள்ளக்குறிச்சி, மார்ச் 8 -கள்ளக்குறிச்சி நகரையொட்டி உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரையொட்டி கோட்டைமேடு பெரியேரி, பசுங்காயமங்கலம் ஏரி, ஏமப்பேர் ஏரி, சித்தேரி ஆகிய 4 ஏரிகள் உள்ளன. பருவ மழையில் கோமுகி அணை நிரம்பி ஆறு வழியாக தண்ணீர்