மேலும் செய்திகள்
சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம்
6 minutes ago
அரசம்பட்டில் நுாலக வார விழா
7 minutes ago
ஆஞ்சநேயருக்கு சம்வத்சரா அபிஷேகம்
7 minutes ago
தியாகதுருகம். டிச. 4-: தியாகதுருகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. டிட்வா புயலால் கடந்த இரு தினங்களாக தியாகதுருகம் பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நாகலுார், வடபூண்டி, பிரிதிவிமங்கலம், விருகாவூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பின. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசன கிணறுகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நாகலுார் ஏரி நிரம்பி வழிவதால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் வடபூண்டி தடுப்பணைக்கு கால்வாய் மூலம் செல்கிறது. தியாகதுருகம் சுற்றியுள்ள கிராமங்களில் ஏரிகள் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 minutes ago
7 minutes ago
7 minutes ago