உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், காவல்துறை மற்றும் வருவாய் துறை தொடர்பான சட்டம் ஒழுங்கு மற்றும் பொது பிரச்னைகள், ஆர்ப்பாட்டம், மறியலால் ஏற்படும் பிரச்னை குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளைக் கையாள வேண்டும். பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை