உள்ளூர் செய்திகள்

செஞ்சியில் சிறுத்தை?

செஞ்சி: செஞ்சி அடுத்த அன்னமங்கலம், சண்டிசாட்சி மலையில் சிறுத்தைகள் வசிக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வராகநதி மேம்பாலத்தில் கடந்த 5ம் தேதி இரவு 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது. காடுகள் இல்லாத விக்கிரவாண்டி பகுதிக்கு சிறுத்தை எங்கிருந்து வந்திருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டது. செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனுார் பகுதியில் சில ஆண்டுகளாக மர்ம விலங்கு தாக்கி கால்நடைகள், நாய்கள் இறந்தன. வனத்துறையினர் விசாரணையில், செஞ்சி அடுத்த அன்னமங்கலம் மலை மீதிருந்து சிறுத்தை சென்றிருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது. அன்னமங்கலம், சண்டிசாட்சி மலைகளில் தீவிர ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ