சட்ட நகல் கிழிப்பு போராட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்த நகல் கிழிப்பு போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனக் கோரி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.