| ADDED : ஜன 25, 2024 11:45 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் பெண் குழந்தைகளின் முக்கியத்தை உணர்த்தும் விதமாக பாலின சமத்துவ உறுதி மொழி நேற்று ஏற்கப்பட்டது.பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிக்கவும், ஆண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்திற்கு நிகராக உயர்த்தவும், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் செயல்பாட்டிற்கும், நடவடிக்கைக்கும் உறுதுணை புரிவோம். கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை கண்டறியவோ, கருக்கொலை செய்யவோ முயலமாட்டேன்.கிராமங்களில் பெண் குழந்தைகள் பிறப்பிற்கும், அவர்களின் பாதுகாப்பிற்கும் பாகுபாடின்றி சமமாக மதிப்பு அளித்து உதவி செய்வோம் என்பது உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கு ஆதரவான உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து, பெண் குழந்தைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று மாணவர்கள் கோஷமிட்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.