மேலும் செய்திகள்
புகார் பெட்டி கள்ளக்குறிச்சி
12-Jun-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் லாரி இன்ஜின் ஆயில் கசிவு ஏற்பட்டு சாலையில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் நேற்று மாலை சென்ற லாரி திடீரென பழுதாகி இன்ஜின் ஆயில் கசிந்து, நீண்ட துாரத்திற்கு சாலையில் கொட்டியது. இதனால் சாலையில் வழவழப்பு தன்மை ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் சாலையில் கொட்டியிருந்த ஆயில் மீது மணல் கொட்டினர்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, எண்ணெய் வழவழப்பு தன்மை குறைவதற்காக தண்ணீரில் பவுடர் கலந்து சாலையில் தெளித்தனர்.
12-Jun-2025