உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மானிய விலையில் மக்காச்சோள விதைகள்; வேளாண் உதவி இயக்குனர் தகவல்

மானிய விலையில் மக்காச்சோள விதைகள்; வேளாண் உதவி இயக்குனர் தகவல்

தியாகதுருகம்; தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாபம் ஈட்ட மக்காச்சோள சாகுபடி முக்கியமான பயிர். இப்பகுதியில் பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுகிய காலப் பயிர் என்பதால் நீர்ப்பாசனம் குறைவாக தேவைப்படும் வயல்களுக்கு மக்காச்சோளம் ஏற்றதாக உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோள செயல் விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதை, உரம், மண்வள மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள், நானோ யூரியா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான பதிவு நடந்து வருகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களை அணுகி ஆதார், சிட்டா, வங்கி புத்தக நகல், 2 புகைப்படங்கள் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை