உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்த திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சுகந்தி, 38; கடந்த 9ம் தேதி இரவு சுகந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் துாங்கினர். மறுநாள் அதிகாலை 5:00 மணியளவில் வீட்டிற்குள் திடீரென சத்தம் கேட்டது. உடன், சுகந்தி எழுந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் தப்பியோடியால் சுகந்தி சத்தமிட்டார். தொடர்ந்து கணவன் கோவிந்தராஜ் மற்றும் அக்கம், பக்கத்தினர் எழுந்து தப்பிய மர்ம நபரை பிடித்து பகண்டை கூட்ரோடு போலீ சாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் அந்தோணிராஜ், 37; என் தெரியவந்தது. பகண்டைகூட்ரோடு போலீசார் அந்தோணிராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை