உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் உண்டியல் உடைத்து திருடிய ஆசாமி கைது

கோவில் உண்டியல் உடைத்து திருடிய ஆசாமி கைது

சின்னசேலம் : சின்னசேலம் கீழ்க்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 20ம் தேதி இரவு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த 3 உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் மற்றும் வெங்கலத்தால் செய்யப்பட்ட 4 மணிகளை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கோவிலில் திருடியது நைணார்பாளையம் பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் சின்னையன், 44; என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கீழ்க்குப்பம் போலீசார் நாராயணனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !