| ADDED : மார் 21, 2024 12:14 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகாடமி பள்ளியில் 'தினமலர்' பட்டம் இதழ் வினாடி வினா போட்டியில் 'மேன் ஆப் தி குவிஸ்' பட்டம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலரின்' அறிவியல் களஞ்சியமான பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் 3 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பட்டம் இதழிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி அளவில் நடந்த பட்டம் இதழ் வினாடி வினா போட்டிகளில் ஆண்டு முழுவதும் அதிக முறை வெற்றி பெற்ற 5ம் வகுப்பு ஜி-1 பிரிவு மாணவி ராஷ்மிக்கு 'மேன் ஆப் தி குவிஸ்' பட்டம் வழங்கி பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமா அன்பு ஆகியோர் மாணவி ராஷ்மிக்கு 'மேன் ஆப் தி குவிஸ்' சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.பள்ளி அளவில் பட்டம் இதழ் வினாடி வினா போட்டிகளை உதவி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, புஷ்பா, வளர்மதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.