உள்ளூர் செய்திகள்

இறைச்சி விற்பனை ஜோர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணும் பொங்கலை யொட்டி மது மற்றும் இறைச்சி விற்பனை படு ஜோராக நடந்தது.கள்ளக்குறிச்சி பகுதியில் பொங்கல் விழா முடிந்து கரிநாள் எனும் உழவர் தினத்தை நேற்று இளைஞர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடினர். பொங்கல் விழா காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறையில் இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட மாமிச உணவுகளை சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதேபோல் குடிபிரியர்கள் பலரும் டாஸ்மாக் கடைகளிலும் வரிசையாக நின்றுகொண்டு சரக்கு வாங்க குவிந்ததால் கடைகள் முன் அதிகளவு கூட்டம் அலை மோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை