மேலும் செய்திகள்
புத்தாடை வழங்கல்
30-Oct-2024
கள்ளக்குறிச்சி ; கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர், அ.தி.மு.க., மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பரிந்துரையின் பேரில், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளராக ராஜிவ்காந்தியை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனையடுத்து கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி, மாவட்ட செயலாளர் குமரகுருவை சந்தித்து, வாழ்த்து பெற்றார். அப்போது, ஒன்றிய பிற அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
30-Oct-2024