உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / செஞ்சியில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

செஞ்சியில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

செஞ்சி : செஞ்சியில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இந்தியன் வங்கி அருகே நடந்த விழாவிற்கு, எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ் வரவேற்றார்.விழாவில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, பாலகிருஷ்ணன், சோழன், நகர செயலாளர் வெங்கடேசன், இளைஞரணி நகர செயலாளர் வேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை