உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிலிண்டர்கள் ஏற்றி சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

சிலிண்டர்கள் ஏற்றி சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்து

உளுந்துார்பேட்டை: நவ. 1-: திருநாவலுார் அருகே காஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ். தக்கா பகுதியை சேர்ந்தவர் சவுகத்அலி, 42; டிரைவர். மினி வேனில் பண்ருட்டி ஏஜென்சியில் இருந்து 40 வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு உளுந்துார்பேட்டை நோக்கி ஓட்டி சென்றார். நேற்று மதியம் 1:30 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த பெரியப்பட்டு அருகே சென்றபோது, மினி வேன் வலது பக்க டயர் வெடித்ததால், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது காஸ் கசிவு இல்லாததால் சிலிண்டர்களை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் சவுகத்அலி காயங்களின்றி உயிர்த் தப்பினார். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை