உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார்வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதி யை சேர்ந்தவர் ஆகாஷ், 20; இவரும், 17 வயது சிறுமியும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்தனர். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆகாஷ் நெருங்கி பழகினார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்தார். கர்ப்பத்தை கலைக்க முயன்றதால் சிறு மியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையறிந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையி ல் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் ஆகாஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை