உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பரமநத்தத்தில் தார்சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 பரமநத்தத்தில் தார்சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி: பரமநத்தம் ஊராட்சியில் ரூ. 17.32 லட்சம் மதிப்பிலான புதிய தார்சாலை அமைக்கும் பணி துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த பரமநத்தம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையொட்டி சங்கராபுரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய தார்சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் அரவிந்தன், அவை தலைவர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் கதிரவன், மாவட்ட பிரதிநிதி இளையராஜா, மாவட்ட கவுன்சிலர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி